இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது..!
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் தொற்றின் இரண்டாம் நிலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்தியா இடையேயான பயணத்திற்கு தடைவிதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. எனினும் தடை காலம் எவ்வளவு நாட்கள் நீட்டிக்கப்படும் என்பது குறித்த தகவல்களை இலங்கை அரசு வெளியிடவில்லை.
இது தொடர்பாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இதனை உடனடியாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






