--- --:--:-- --

ஜூன் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்..!

4

ஜூன் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என அப்பலோ குழுமம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தந்தது.

 

இந்த தடுப்பூசியை டாக்டர் ரெட்டி நிறுவனம் தயாரித்து ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் இரண்டாவது வாரத்தில் இந்த நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த குடும்பம் அறிவித்துள்ளது.

 

ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்த ஆயிரத்து 195 ரூபாய் கட்டணம் என அப்போலோ குழுமம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி விலை 995 ரூபாய் எனவும் கட்டணமாக 200 ரூபாய் சேர்த்து 1195 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon