--- --:--:-- --

இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது..!

4

ன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா கடந்த சில மாதங்களாக ஆளுநரின் பரிசீலனையில் இருந்தது. இதையடுத்து மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் இவ்வழக்கின் மசோதாவை ஆளுநர் ஆர்‌என் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

 

அதன்படி புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் மீது வழக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Right Menu Icon