ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நடிகை ரோஜா..!
திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரி சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த ரோஜா தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நகரி தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டது எனவும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களை வழங்குவதாக முதலமைச்சரின் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியில் உள்ள நெசவாளர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.





