பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது..கல்வித்துறை விடுத்த எச்சரிக்கை..!
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த இடைப்பட்ட நாட்களில் சில பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளனர். இதற்கு பள்ளி கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





