--- --:--:-- --

தொடர் விடுமுறையால் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்..!

1

தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளியை தொடர்ந்து சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையிலிருந்து கோவை, சேலம், நாகை, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்ரல் 17ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon