திடீரென பெரும் சப்தத்துடன் வெடித்த பேருந்தின் டயர்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து பேருந்தின் முன்புற பலகை உடைந்து பள்ளி சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காட்டுமன்னார் கோயிலில் இருந்து தெம்மூர் வழியாக சிதம்பரம் கோபி வந்த அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
விக்ரமாதி என்ற ஊரின் அருகே வந்தபோது திடீரென பேருந்தில் இருந்த பின்பக்க பெ டயர்களில் ஒன்று பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் டயரின் மேற்பகுதியில் உள்ள மரத்தாலான பலகை பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவரின் காலில் சிக்கிக்கொண்டது.
உடனடியாக நிறுத்தப்பட்டு முதியவர் மீட்கப்பட்டார். இதில் 3 பள்ளிச் சிறுவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.





