பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று சிறப்பு ஏற்பாடு..!
பத்திரபதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்த நாட்களில் அதிகளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் புகாரை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
அதன்படி இன்றைய பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு நூற்றுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு தொகுதிகளிலும் வழங்கப்படும் என்று பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





