தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபரின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த மகன்!
சென்னை மாங்காட்டில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை பெண்ணின் மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை குற்றவாளி போலீசில் சிக்கியது எப்படி?ஓட்டுனர் அஜித் மாங்காடு மலைப் பக்கத்தில் மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அருகே உள்ள முட்புதரில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் ரஞ்சித் சடலமாக கிடந்தார்.
அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ரஞ்சித் மீது சிறு சிறு அடிதடி வழக்குகள் தகராறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விமல் மற்றும் நண்பர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர்.
திருமழிசையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த விமல் மற்றும் அவரது நண்பர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விமலின் தாயுடன் கடந்த 7 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்த விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரஞ்சித்தை கண்டித்துள்ளார். ஆனால் ரஞ்சித் அதை பொருட்படுத்தாமல் கள்ளத்தொடர்பை தொடர்ந்தார்.
ஆத்திரமடைந்த மகன் ரஞ்சித்தை கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ரஞ்சித் நண்பரை விட்டு நைசாக பேசி காட்டிற்கு அவரை அழைத்து வந்துள்ளார் விமல். அங்கு மறைந்திருந்த கும்பல் ரஞ்சித்தை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததுடன் அவரது ஆணுறுப்பையும் அறுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கில் விமலும் அவரது நண்பர்கள் பிரேம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தாயின் கள்ளக்காதலனை மகன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் மாங்காட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.







