ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளி மகன் மற்றும் தாய் தற்கொலை..!
தேனி மாவட்டம் போடியில் குடும்ப வறுமை காரணமாக மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்காலனி ஒன்பதாவது தெருவை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் மாற்றுத்திறனாளியான மூத்த மகன் ரங்கராஜ் என்பவருடன் வசித்து வந்தார்.
காய்கறி விற்பனை செய்து வந்த நாகலட்சுமி ஊரடங்கால் போதிய வியாபாரம் இன்றி சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வறுமை காரணமாக தவித்து வந்த நிலையில் தாயும் மகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.







