--- --:--:-- --

கஞ்சா கிடைக்காததால் கத்தியை விழுங்கிய நபர்..!

10.1

டெல்லியில் இளைஞரின் வயிற்றில் சிக்கி இருந்த 20 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர்.

 

ஹரியானாவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு தீவிர கஞ்சா பழக்கம் இருந்ததும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கஞ்சா கிடைக்காததால் அந்த வெறியில் கையில் கிடைத்த கத்தியை அவர் விழுங்கியுள்ளார்.

 

பின்னர் வயிற்று வலி இருந்து வந்ததால் அவர் குடும்ப டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கொரொனா பரிசோதனைகள் செய்து பார்த்ததில் வயிற்றுக்குள் கட்டி இருப்பதை அறிந்து அதிர்ந்த மருத்துவர்கள் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அதனை வெளியே எடுத்தனர். சிறிய தவறு நடந்தாலும் உயிரே போய்விடும் என்று நிலையில் மிகவும் கவனமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக மருத்துவர்கள் கூறினர்.

Leave a Reply

Right Menu Icon