--- --:--:-- --

சில நாடுகள் பயங்கரவாத வைரஸை பரப்பி வருகின்றன!

1.1

உலகமயமாக்கலில் புதிய பரிமாணம் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அணிசேரா நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர் உலகமே கொரொனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் சில நாடுகள் பயங்கரவாத வைரசை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாம் என்று அழைக்கப்படும் அணிசேரா நாடுகள் அமைப்பின் கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது.

 

இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரொனாவுக்கு எதிரான போரை சுய ஒழுக்கம் மற்றும் ஜனநாயகம் நிறைந்த மக்கள் இயக்கமாக இந்தியா மாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

கொரொனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை சுமார் 120 நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவித்த மோடி மனித நேயம் குறைந்து வரும் தற்போதைய சூழலில் நாம் அமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

உலகமே கொரொனாவுக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில் சில நாடுகள் பயங்கரவாதம் என்ற வைரஸை பரப்புவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டிய பிரதமர் தவறான செய்திகள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமுதாயத்தையும் நாடுகளையும் அவை பிளவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

 

கொரொனா வைரஸ் சர்வதேச அமைப்புகளின் வரம்புகளை வெளிக்காட்டிய நிலையில் புதிய மாற்றம் தேவை என்று மனிதநேயம், சமத்துவம், வெளிப்படைத்தன்மை நிறைந்த உலகமயமாக்கல் முறை தேவை என்று கூறினார். சர்வதேச அமைப்புகள் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தனிமனித நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon