ஈ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு..!
சென்னையில் ஈ.சி.ஆர் சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையே நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது. சென்னை டைடல் பார்க் சந்திப்பில் தொடங்கி உத்தண்டியில் முடிவடையும் இந்த 15 கி.மீ நீள உயர்மட்டச் சாலை, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (டான்ஷா), ஹைப்ரிட் அனிட்டி முறையில் இந்தச் சாலையைக் கட்டுவதற்கு சர்வதேச அளவிலான போட்டி ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்றுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கி.மீ தூரத்திற்கு ரூ.1,075 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தற்போது ஒரு மணி நேரமாக உள்ள பயண நேரம் 10 நிமிடங்களாகக் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்) திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையே இந்த நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது. சென்னை டைடல் பார்க் சந்திப்பில் தொடங்கி உத்தண்டியில் முடிவடையும் இந்த 15 கி.மீ நீள உயர்மட்டச் சாலை, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பயண நேரத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (டான்ஷா), ஹைப்ரிட் அனிட்டி முறையில் இந்தச் சாலையைக் கட்டுவதற்கு சர்வதேச அளவிலான போட்டி ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்றுள்ளது. சுமார் ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் முதல் திட்டமாகும்.
இந்த மேம்பாலம் எல்.பி சாலை (LB Road), கொட்டிவாக்கம், நீலாங்கரை, இஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை ஆகிய முக்கிய சந்திப்புகள் வழியாகச் செல்லும். உள்ளூர் பயணிகள் பயன்படுத்த ஏதுவாக எல்.பி சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ (RTO) அலுவலகம், நீலாங்கரை, இஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை ஆகிய இடங்களில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ‘ரேம்ப்’ (Ramps) வசதிகள் அமைக்கப்படும்.
தற்போது இந்தப் பாதையில் ஒரு நாளைக்கு சுமார் 69,000 வாகனங்கள் பயணிக்கின்றன. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும், அதிகப்படியான வாகன எண்ணிக்கை மற்றும் நெடுஞ்சாலையுடன் இணையும் 347 சிறிய சாலைகளால் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.
ஏற்கனவே ஆறு வழிச் சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, இந்த உயர்மட்டச் சாலைத் திட்டத்திற்குப் புதிதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்திற்கான அறிவிப்பு 2025-26 மாநில பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கி.மீ தூரத்திற்கு ரூ.1,075 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தற்போது ஒரு மணி நேரமாக உள்ள பயண நேரம் 10 நிமிடங்களாகக் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.பி சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ (RTO), நீலாங்கரை, இஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை ஆகிய 5 இடங்களில் வாகனங்கள் ஏறி இறங்க வசதிகள் செய்யப்படும். தற்போது திருவான்மியூர் முதல் அக்கரை வரை சாலையை நான்கு வழியிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. தினமும் சுமார் 1.1 லட்சம் பேர் ஈ.சி.ஆர் சாலையைப் பயன்படுத்துகின்றனர். திருவான்மியூர் – உத்தண்டி இடையே மட்டும் நாளொன்றுக்கு 69,000 வாகனங்கள் பயணிக்கின்றன.
அக்கரையில் ஒரு ரவுண்டானா அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஈ.சி.ஆர் சாலை ஓ.எம்.ஆர் (OMR) சாலையுடன் இணைக்கப்படும். இந்த 15 கி.மீ தூரத்தில் தற்போது 17 போக்குவரத்து சிக்னல்களும், இருபுறமும் இணைக்கும் 347 சிறிய சாலைகளும் உள்ளன. உயர்மட்ட சாலை அமைப்பதன் மூலம் இந்தத் தடங்கல்கள் தவிர்க்கப்படும்.
விரிவாக்கப் பணிகளில் சாலையின் இருபுறமும் 5 அடி அகலத்தில் மழைநீர் வடிகால் மற்றும் 4 அடி அகலத்தில் மையத்தடுப்பு அமைப்பதும் அடங்கும். இந்தத் திட்டம் ஐ.டி (IT) நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் இச்சாலையைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





