--- --:--:-- --

சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்

4

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் ஒருவர் சோப்பு போட்டு குளித்தது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் சாலையில் வீணாவதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து மாநகராட்சியிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர் குழாயில் உடைந்து வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

சாலையில் வீணாகும் தண்ணீரில் ஒருவர் சோப்பு போட்டு குளித்ததை அந்த வழியே சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon