மாற்று எரிசக்தியை உருவாக்கி 42 கி.மீ வரை பைக்கை இயக்கி இளைஞர்
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் கார்பைடு கற்கள் மூலம் உருவாக்கப்பட்ட வாயுவைக் கொண்டு இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார்.
தமிழக, கர்நாடக எல்லையான காரைக்காடு பகுதியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி கார்பைடு கற்கள் உடன் தண்ணீரை கலந்து உருவாகும் கால்சியம் கார்பெட் ஆக்சிஜன் வாயுவை கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளார்.
42 கிலோமீட்டர் தூரம்வரை இயக்கி தக்ஷிணாமூர்த்தி தான் குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கிட்டத்தட்ட நிலக்கரிக்கு உண்டான பண்புகளை கார்பைடு கற்கள் கொண்டிருப்பதால் இது வாகனத்தை இயக்குவதற்கு சாத்தியமாக இருந்ததாக கூறப்படுகிறது.






