திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகுந்த பாம்பு..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அவளிவணல்லூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பெண்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் ஓணான் புகுந்து விட்டதாக மு க ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் கூட்டத்தில் புகுந்தது விஷமற்ற தண்ணீர் பாம்பு என்றும் அதனை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்தது.







