6 அடி நீள மலைப்பாம்பை வெறுங்கையால் பிடித்த காவலர்..!
மும்பை தாராவியில் வீட்டில் புகுந்த மலைப்பாம்பை காவல்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு போய் விட்டனர். இந்த காட்சியை ட்விட்டர் வலைத்தளத்தில் ஏராளமானோர் பார்த்துள்ளனர். மும்பை தாராவியில் ஒரு வீட்டில் புகுந்த மலைப்பாம்பு ஓட்டுக் கூரையை உட்பகுதியில் பதுங்கி இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அதை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். காவலர் முரளி கடும் முயற்சிக்கு பின்பு வெறும் கையால் மலைப்பாம்பை பிடித்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்துள்ளார்.







