அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்..!
அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை மற்றும் சம ஊதியம் அளிப்பதே தனது லட்சியம் எனவும் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்தும் என்றும் அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.







