சற்று குறைந்த தங்கம் விலை..!
சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேசமயம் சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. வரும் நாட்களிலும் இது தொடருமா என நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்திருந்த வேளையில், இறங்கிய வேகத்தில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
தொடர்ந்து நேற்று மாலை தங்கம் விலை சட்டென்று குறைந்தது. அதன் படி நேற்று அக்டோபர் 21ஆம் தேதி மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று அக்டோபர் 22ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.9,800க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.78,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கும் ஒரு கிலோ ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





