--- --:--:-- --

சிவகார்த்திகேயன் பாவம், டீசன்டான மனிதர்..!

14

மிழ் சினிமாவில் வலம் வந்த முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான். இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்தார், அதில் ஒரு ஷாக்கிங் செய்தியை வெளியிட்டுள்ளார்.

 

அதாவது சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் உடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.

 

அந்த துரோகம் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன், அவர் என்ன பதில் சொன்னார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு குழந்தைகள் எதிர்காலம் தான் காரணம் என கூறியிருந்தார்.

 

அவர் கூறிய விஷயம் ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த நிலையில் டி.இமானின் முன்னாள் மனைவி மோகினா சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர், அவர் பாவம். நாங்கள் பிரிய கூடாது என நினைத்தார், எந்த ஒரு நண்பனும் பிரியகூடாது என்று தான் நினைப்பார்.

 

இமானுக்கு விவாகரத்து விஷயத்தில் சப்போர்ட் செய்யவில்லை, எனவே தான் அவர் சிவகார்த்திகேயன் மீது இப்படிபட்ட குற்றச்சாட்டு வைத்துள்ளார். பட வாய்ப்பு இல்லை என்பதால் இமான் இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார் என கூறியுளளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon