--- --:--:-- --

தொடர் பட்டாசு விபத்து – நிதி துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

1

தொடர்ச்சியாக நடக்கும் பட்டாசு விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து புதன்கிழமை விருதுநகரில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

 

சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆறுதல் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி அனைத்து உதவிகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

பட்டாசு ஆலையில் பொருத்தவரை அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon