சுமார் 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில்..!
Shiridi Sai Baba Mandir
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட சீரடி சாய்பாபா கோவில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் மத வழிபாட்டு தளங்களை தடுக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து இன்று அதிகாலை சீரடியில் உள்ள சாய்பாபா கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலமாக பதிவு செய்வோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் நிலையில் கொரொனா பாதுகாப்பு நெறி முறைகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது.







