சொத்துக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற சித்தி..!
கர்நாடகாவில் சொத்துக்காக ஐந்து மாத குழந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல்கீரா கிராமத்தை சேர்ந்த சித்தப்பா – ஸ்ரீதேவிக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஸ்ரீதேவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என கூறி வேறொரு பெண்ணை சித்தப்பா இரண்டாவதாக திருமணம் செய்தார். இதையடுத்து ஸ்ரீதேவி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சித்தப்பா தேவலமா தம்பதிக்கு நான் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேவியை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி கணவருடன் சேர்த்து வைத்தனர்.
ஒரே வீட்டில் அனைவரும் இருந்த நிலையில் ஸ்ரீதேவிக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி வாயில் நுரை தள்ளி இருந்தது.
தனக்கு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் சொத்து பிரச்சனை காரணமாக ஸ்ரீதேவியின் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துக்கொண்டதை தேவனம்மாள் ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





