இளைஞர்களுக்கு நூதன முறையில் தண்டனை கொடுத்த எஸ்ஐ..!
கோவையில் திருவிழாவில் தகராறு செய்த இளைஞர்களுக்கு போலீசார் நூறு திருக்குறள் எழுத வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார். கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலம் முழுவதும் திருவிழாக்கள் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது உதவி ஆய்வாளர் இளைஞர்கள் அனைவரையும் திருக்குறள் எழுதவைத்து மனப்பாடம் செய்யச் சொல்லியும் நூதன முறையில் தண்டனை வழங்கினார்.






