--- --:--:-- --

திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. காவல் பணியில் இறங்கிய கிராம மக்கள்..!

6

திண்டுக்கல் அருகே தொடர் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக ஊர் பொதுமக்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் மாத்தூர் அடுத்த ஆலமரத்துப்பட்டி ஊராட்சி போக்குவரத்து நகரில் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

இது குறித்து காவல்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததை எடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலை சம்பவங்களை தடுக்க அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சங்கம் அமைத்து சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தங்களுடைய வீடுகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஒரு நாளைக்கு 25 நபர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon