செவிலியர்களின் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் செய்வதால் அதிர்ச்சி..!
கும்பகோணம் அரசு மருத்துவ மனைகளில் செவிலியர்களின் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். சிலர் இந்த பணிகளை செய்தால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





