--- --:--:-- --

சென்னையில் அதிர்ச்சி.. 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

2

சென்னை பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாய், தந்தை என இருவரும் தினமும் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

 

இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், சிறுமியின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போடச் செல்வது போன்று சென்று, சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து பழகி வந்தான். ஒரு கட்டத்தில், சிறுமியை காதல் செய்வதாக ஆசை வார்த்தை கூறினான்.அதனை உண்மை என்று நம்பிய சிறுமியும் அந்த சிறுவனிடம் பழகி வந்தாள்.

 

இந்த நிலையில், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அந்த சிறுவன், சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அத்துடன் தனது நண்பர்கள் சிலரையும் சிறுமியிடம் அறிமுகம் செய்து வைத்து, அவர்களையும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வைத்துள்ளான்.

 

இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு கட்டத்தில் தனக்கு என்ன நேர்ந்தது என்று கூட தெரியாமல் தனிமையில் சோகமாக இருந்து வந்திருக்கிறார். இதனைக் கண்ட அவரது தாயார், சிறுமியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

Right Menu Icon