--- --:--:-- --

மாஸ்டர் திரைப்படத்தின் முழு காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் அதிர்ச்சி..!

7

மாஸ்டர் திரைப்படத்தின் முழு காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்னதாகவே ஒரு மணி நேர காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருந்தன.

 

இந்த நிலையில் முழு காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 50 சதவீதத்திற்கு மேல் ரசிகர்களை அனுமதித்ததாக சென்னை காசி திரையரங்கம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கொரொனா பரவல் குறித்து தெரிந்தே கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், அரசு உத்தரவை மீறி செயல்படுதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon