--- --:--:-- --

உலகிலேயே இளம் வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்

2

பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயதான சன்னா மெரின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்லாந்து நாட்டில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சியினுடைய தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

 

இதில் பிரதமராக இருந்த ரின் மீதான நம்பிக்கையை தாம் இழந்துவிட்டதாக கூட்டணிக் கட்சியினர் அறிவித்ததையடுத்து ரின் பதவி விலகினார். இதனையடுத்து சமூக ஜனநாயகவாதிகள் கட்சியினுடைய சன்னா மெரின் நாட்டினுடைய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக செயற்பட்டு வந்தார். 34 வயதான சன்னா மெரின் பின்லாந்தின் இளம் பிரதமரானார். மேலும் உலகிலேயே இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சன்னா மெரின். இதில் தற்போது பதவியில் இருக்கும் பிரதமர்களில் இளம் வயது உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon