--- --:--:-- --

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெயில்..!

9.1

மிழகத்தில் கோடை வெயில் மெல்ல மெல்ல தனது உக்கிரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கடலோரப் பகுதிகளில் புழுக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படக்கூடும். மாற்றமடைந்து வரும் வானிலை சூழல்கள் குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்தும் விரிவான வானிலை முன்னறிவிப்பை இங்கே காணலாம்.

 

இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடல் மட்டத்திலிருந்து 0.9 கி.மீ உயரத்தில், ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், தெலுங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல கீழடுக்கு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.

11-04-2026: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

12-04-2026: தெற்கு தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon