செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா..தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.
எனவே ஒன்றுபட்ட அதிமுக அவசியம். அதற்கான நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக கெடு விதித்தார். இதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இந்த சூழலில் தேவர் ஜெயந்தி நிகழ்வின் போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உடன் கைகோர்த்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார் என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கின.
இதனையடுத்து இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், செங்கோட்டையனை திமுக அமைச்சர் சேகர் பாபு சில நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவரை திமுகவில் இணைப்பதற்கு அக்கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியதாக பேசப்பட்டது.
ஆனால் அது தோல்வியில் முடிந்ததால், தவெக பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதாக தெரிகிறது.





