தமிழக அரசின் புதிய குழு: தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமனம்
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள கோயில்களுக்குப் பரம்பரை முறை வழி அறங்காவலர்களை நியமனம் செய்திட, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து உரிய பெயர்ப் பட்டியல் தயாரிக்க தமிழ்நாடு அரசு மாநிலக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இக்குழுவில் ஆன்மீகப் பேச்சாளர் சுமதிஸ்ரீ, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சம்பத் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராமநாதன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




