--- --:--:-- --

செல்வராகவன் அசிங்கமா கெட்ட வார்த்தையில் திட்டினார்..!

11

மிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல கல்ட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

 

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனராக மட்டுமின்றி சமீபகாலாமாக நடிகராகவும் கலக்கி வருகிறார்.

 

இவர் இயக்கத்தில் அடுத்ததாக என்ன படம் வரப்போகிறது என ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், புதுப்பேட்டை படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து பிரபல நடிகர் பாவா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாவா லட்சுமணன் “புதுப்பேட்டை படத்தில் இரண்டு நாட்கள் நடித்தேன், அதன்பின் என்ன படத்திலிருந்து அனுப்பிவிட்டார். எனக்கு நடிக்கவே தெரியவில்லை என செல்வராகவன் கூறிவிட்டார். ரொம்ப கெட்ட வார்த்தைகளில் கூட என்னை திட்டினார். மனசு கேட்கல அதனால் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.

 

செல்வராகவன் தன்னிடம் துணை இயக்குனராக பணிபுரிபவர்களையும் திட்டுவார். செல்வராகவன் அங்கு வருகிறார் என்றால், துணை இயக்குனர்கள் அனைவரும் ஓடி போய் ஒளிந்துகொள்வார்கள்” என கூறினார். பாவா லட்சுமணன் வெள்ளித்திரையில் மூத்த நடிகர்களில் ஒருவர் ஆவார்.

 

பல நகைச்சுவை காட்சிகள் மூலம் நம்மை சிரிக்க வைத்துள்ளார். வாமா மின்னலு என்ற வசனமே அதற்கு உதாரணம். சமீபத்தில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதிலிருந்து தற்போது மீண்டும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon