சூர்யா அளவுக்காவது விஜய் வர வேண்டும் என சீமான் பேச்சு..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காவது மக்களுக்காக குரல் கொடுத்து விட்டு அரசியலுக்கு வரலாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் 24-வது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
உறுதிமொழி நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் விஜய் குறித்தும் எம்ஜிஆர் குறித்தும் அவர் தெரிவித்த விமர்சனங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சீமான் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் சூர்யா அளவுக்காவது மக்கள் பிரச்சினையில் குரல் கொடுத்துவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்று தெரிவித்தார். எம்ஜிஆரை பற்றி தன்னை விட அதிகமாக தெரிந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது என்றும் சீமான் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.






