போட்டோ ஷூட்டிற்கு சென்ற புகைப்பட கலைஞருக்கு அரிவாள் வெட்டு..!
சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோஷூட் நடத்த வந்த போட்டோகிராபரை வெட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருமுல்லைவாயிலை சேர்ந்த மாறன் என்பவர் திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடியை புகைப்படம் எடுப்பதற்காக மெரினா கடற்கரைகடற்கரைக்கு சென்று உள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத கும்பல் செல்போனை கேட்டு மிரட்டி புகைப்பட கலைஞரை மிரட்டியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 17 வயது சிறுவன் மூன்று பேர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





