--- --:--:-- --

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தில் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் சோதனை செய்ய தேவையில்லை..!

3

கொரோனா சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தில் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் சோதனை செய்ய தேவையில்லை என சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது.

 

சில மருத்துவமனைகள் இந்த சோதனையை செய்வதாகவும் அதை அனுமதிக்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் துறையினரை சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

 

லேசான மற்றும் மிதமான தொற்று பாதித்தவர்களுக்கு சோதனை தேவையில்லை என்றாலும் அவர்களிடம் அறிகுறிகள் மறைந்த பிறகு இந்த சோதனையை செய்து டிஸ்சார்ஜ் செய்யலாம். அதே போன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகளிடம் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணிக்க வேண்டும்.

 

அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் உள்ளூர் மருத்துவ சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். வீட்டு தனிமையில் இருக்க ஆலோசனை வழங்கும்போது கருப்பு பூஞ்சை அறிகுறிகள் குறித்தும் அறிவுறுத்த வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon