--- --:--:-- --

ஒரிசாவில் டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..!

14

பெருந்தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை அச்சத்தால் ஒடிசாவில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும் கொரொனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.

 

ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் மாநிலங்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகள் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளை தொடங்கிய சில நாட்களிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில் கொரொனா தொற்று பாதிப்பின் காரணமாக பள்ளிகளை திறக்க வேண்டாம் என ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தேர்வு நடத்தவும் பிற நிர்வாக செயல்பாடுகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon