சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்துள்ளார். கனகராஜ் என்ற ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சரக்கு ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். அவரது தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





