தண்டவாளத்தில் சிக்கிய இரு சக்கர வாகனம்..! நூலிழையில் தப்பித்த நபர்..!
உத்தரபிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தின் இரு சக்கர வாகனம் சிக்கிய நிலையில் அதில் இருந்த நபர் நொடியில் உயிர் தப்பியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ரயில்வே கேட் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலை கடக்க மக்கள் காத்திருந்த பொழுது அருகே உள்ள தண்டவாளத்தில் திடீரென மற்றொரு ரயில் வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் உடனடியாக பின் நோக்கி சென்றனர். அப்போது ஒருவருடைய வாகனம் மட்டும் அந்தப்புரத்தில் சிக்கி கொண்டது.
அப்போது அவர் உடனடியாக அந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு பின் நோக்கி வந்தார். இதனால் நொடியில் அவர் உயிர் தப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





