மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தலைமையாசிரியர்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான பரக்கை பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பள்ளிக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரித்ததில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமை ஆசிரியர் லக்ஷ்மணனை கைது செய்தனர்.
ஏற்கனவே விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பொழுது அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்தது. புகாரையடுத்து இந்த நபர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





