6-12 வயதினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..!
6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரொனா தொற்று தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் ஏறுமுகம் கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடும் நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 12 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்த தொடங்க வேண்டும் என்றார்.





