டோல்கேட் ஊழியரை லாரி பம்பரில் தொங்கவிட்டு 10 கிமீ ஓட்டிய சம்பவம்..!
டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன் முன்புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்றது.
இதனை கவனித்த டோல் கேட் ஊழியர் பக்கம் முன்பாக ஏறி அதனை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அதையும் பொருட்படுத்தாது லாரி ஓட்டுநர் ஊழியரை லாரியில் தொங்கவிட்டபடி சுமார் பத்து கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சாலையில் வேகமாக சென்று லாரியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.





