கோவையில் ஆறாம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு சீல் வைப்பு!
கோவையில் ஆறாம் வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு நடத்திய மேல்நிலைப் பள்ளிக்கு சீல் வைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். வெரைட்டி ஹால் பகுதியில் இயங்கிவரும் c.s.i. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர மாணவ ர்களுக்கு நுழைவுத் தேர்வு இரு தினங்களாக நடத்தப்பட்டு வருவதாக பிரேம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களோடு புகார் அளித்தார்.
நாளொன்றுக்கு 10 முதல் 15 மாணவர்கள் வரை வரவழைக்கப்பட்டு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திறக்க வட்டாட்சியர் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வந்தது உறுதியானதை அடுத்து பள்ளி முதல்வரை நுழைவுத் தேர்வு நடத்திய பகுதி என அனைத்தையும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நுழைவுத் தேர்வு நடத்தியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்திருக்கிறார்.







