--- --:--:-- --

அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை..!

5

னைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை நாளாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

 

வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வரக்கூடிய சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை என்று நான்கு நாட்கள் நாளை முதல் தொடர்ச்சியாக விடுமுறை நாட்களாக வருகின்றன.

 

சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுவதால் தொலைதூரத்தில் ஆசிரியர், மாணவர்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுவதன் காரணமாக சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon