பாம்பை ஏவி மனைவியைக் கொலை செய்த கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!
கேரள மாநிலத்தில் பாம்பை ஏவி மனைவியைக் கொலை செய்த கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பத்தனம்திட்டாவை சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் உத்ரா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு ஒன்றினை வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி உத்ரா படுக்கையில் இருந்த நிலையில் கிடந்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு பாம்பு கடித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முன்பு ஒருமுறை பாம்பு கடித்தபோது பெற்றோர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். இரண்டாவது முறையும் பாம்பு கடித்திருப்பதால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் பணம் மற்றும் சொத்துகளை தன் வசமாக்க பத்தாயிரம் ரூபாய்க்கு விஷ பாம்பை விலைக்கு வாங்கி அதனை விடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். விசாரணை கொல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கருநாகப்பாம்பை உத்ராவின் கணவருக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு விற்ற நபர் சாட்சியாக மாறி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இறுதி விசாரணை கடந்த ஜூலை மாதம் முடிந்த நிலையில் இன்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.







