--- --:--:-- --

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா தெரிவித்துள்ள உண்மை..!

6

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தான் என்றும் தடையாக இருந்ததில்லை என்றும் அன்றைய சூழலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர் என சசிகலா விளக்கமளித்துள்ளார்.

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் தான் தலையிட்டது இல்லை என சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக விரிவாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 2012 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், தனக்கும் இடையிலான உறவு சரியில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பொய்யான கருத்தை ஆணையம் தெரிவிக்க யார் காரணம் யாருடைய அரசியல் காரணத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கு விட்டுவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க என்றும் தடையாக இருந்ததில்லை என்றும் தன் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுப்பதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் மனநிலையை இனி யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என கூறியுள்ள சசிகலா எந்தவிதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த மருந்துகள் தர வேண்டும் என்ற முடிவை மருத்துவக்குழுவினர் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

 

ஜெயலலிதாவுக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்த அனைத்து மருத்துவர்களும் முடிவு எடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ள சசிகலா இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon