இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் 3 வயது குழந்தை உட்பட 3 பேர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
ராமகிருஷ்ணன் உட்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்து சிக்கிக் கொண்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






