ரஷ்யாவின் வெற்றி விழா: பிரதமர் மோடிக்கு அழைப்பு
ரஷ்யாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். 2ஆம் உலகப் போரில் வெற்றி வாகை சூடியதை ஆண்டுதோறும் மே 9 ஆம் தேதி ரஷ்யா கொண்டாடி வருகிறது.
80 ஆம் ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





