மகளிர் உரிமைத்தொகை பெற ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் என வதந்தி..!
மகளிர் உரிமைத்தொகை பெற ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும் என பரவிய தகவல் பொய்யானது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் 21ஆம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற முகாம் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் குறுஞ்செய்திகள் பரவின. இந்த நிலையில் முகாம் குறித்த தகவல் தவறானது என்று மாவட்ட ஆட்சியர் காமாட்சி விளக்கமளித்துள்ளார்.
இந்த தகவலை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் இது போன்ற தகவல்களை பரப்பி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.





