சாலையை கடக்கும் பொழுது விபத்து..!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே ஒரு வழி பாதையில் வந்து சாலையை கடந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் சரக்கு வாகனம் சேதமடைந்த நிலையில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஒருவழி பாதையில் விதிகளை மீறி வந்த சரக்கு வாகன ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





